புலிகள் மீதான தடை நீக்கம் – ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

புலிகள் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு!   இந்தியாவும் புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை! தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட எதிரானவை என, (புரட்டாசி 30, 2045 / 16.10.2014 அன்று) இலக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2001ஆம் ஆண்டு செப்டம்பரில்…

விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல: இத்தாலி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உரோம்:         இத்தாலியில் கடந்த 2008–  ஆம் ஆண்டு தமிழ்ச் தேசிய செயல் வீரர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி  திரட்டி வழங்கினர். இது பன்னாட்டுப் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரானது எனத் தமிழ்த் தேசிய செயல்வீரர்கள்  தளையிடப்பட்டனர். அவர்கள் மீது கடந்த 2010–ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என கடந்த 2011–ஆம் ஆண்டில்  இத்தாலி  நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்தின் மூலம் மருத்துவம்,…

மொரிசியசில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூண்

  மொரிசியசின் பின்பேசின்(Beau Bassin)என்னும் நகரில் விடுதலைப்புலிகள் நினைவுத்தூண்  அமைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் துயர நினைவுநாளான மே 18, 2012 இல் திறக்கப்பட்டது இது. மொரிசியசிலுள்ள பியூபேசின் உரோசு குன்று (Beau Bassin Rose Hill) நகர் மன்றம் உலகத்தமிழர்களின் போற்றுதலுக்கும் உலக மனித நேயர்களின் பாராட்டுதலுக்கும் உரித்தாகியுள்ளது.