தமிழ்க்காப்புக்கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர்உரை 142&143 : 21.09.2025
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 142 & 143; நூலரங்கம் புரட்டாசி 05, 2056 ஞாயிறு 21.09.2025 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர்…
சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் – ஆவணி 22, 2056 / 07.09.2025 ஞாயிறு காலை 10.00
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.(திருவள்ளுவர், திருக்குறள் ௫௰ – 50) தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் ஆவணி 22, 2056 / 07.09.2025 ஞாயிறு காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் உரையாளர்கள் : தயால் சிங்கு மாலைக் கல்லூரி, புது தில்லி மாணாக்கர்கள் செல்வி சி. சிரீ தர்சினி…
௪. திருத்தமாய்ப் பேசுங்கள்! – வி.பொ.பழனிவேலனார்
(௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்? – புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்தமிழ் ௪. திருத்தமாய்ப் பேசுங்கள்! தமிழ்மொழி தோன்றிய காலம், மொழியறிஞர்களாலும் கணிக்கவியலாத புதிராயுள்ளது. அஃது, உலக மொழிகட்கு முன்னோடியும், முதல் தாய்மொழியுமாகும். இத்தகு தமிழ்மொழி சேர, சோழ, பாண்டிய அரசர்களால் சீராட்டி, பாராட்டி வளர்க்கப் பெற்றதாகும். பாண்டியப் பேரரசு முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவிப் பேணியது. மூவேந்தர் காலத்திற்குப் பின்னர் தமிழ் பல இடர்ப்பாடுகட்கு உள்ளாகியது. தமிழ்நாடும் பலரது படையெடுப்புக்கு ஆளாகியது.தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள் தம் மொழி, சமயம்,…
௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்? – புலவர் வி.பொ.பழனிவேலனார்
(உ. உயர்தனிச் செம்மொழி : வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்தமிழ் ௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்?முன்னுரை உலக மொழிகளுள் முதன்மையானதும், பண்பட்டதும் தமிழ்மொழி ஒன்றே. எழுத்துகள் செப்பமாயமைந்தது; மென்மை, வன்மை, இடைமை ஒலிகளையுடைய எளிய இனிய மொழி; ஒரு சொற்கு ஒரு பலுக்கல் உடையது; ஒரு சொல்லில் உள்ள எல்லா எழுத்துகளும், ஒலிக்கும் இயல்புடையது. எழுத்து மாற்றம் வீரமாமுனிவரால் செய்யப் பெற்றபின், பெரியார் வழி பற்றி, தற்போது தமிழக அரசு ஓரளவு எழுத்துச் சீர்திருத்தம் செய்துளது. இதற்குமேல் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்றாலும்…
உ. உயர்தனிச் செம்மொழி : வி.பொ.பழனிவேலனார்
(க. தமிழ் வளர்ப்போம்– வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்தமிழ் உ. உயர்தனிச் செம்மொழி ஒருவர் (எவர் பெயரையும் குறிப்பிட விரும்புகிலேம்) தமிழில் பேச்சுமொழியை ஒழுங்குபடுத்திச் செப்பம் செய்யவேண்டும் என்கின்றார்; வேறொருவர், பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தாம் தமிழ் வளர்ச்சியடையும் என்கின்றார்; இன்னொருவர், அறிவியல் கருத்துகளைத் தமிழில் எழுத, பேசப் பிறமொழிச் சொற்களை அவ்வாறே எடுத்தாள வேண்டும். அன்றுதான் அறிவியல் தமிழ் வளரும் என்று சொல்கின்றார்; ஆங்கில மொழியைப் பின்பற்றி எழுத வேண்டும் என்கின்றார் மற்றொருவர்; ‘தமிழ்க் கழகங்கள் முத்தமிழ் வளர்த்தன என்பதெல்லாம் கட்டுக்கதை; தமிழ்ச்சங்கங்கள்…
க. தமிழ் வளர்ப்போம்– வி.பொ.பழனிவேலனார்
(௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும் சொற்களும் திருத்தமும் – -தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ் க. தமிழ் வளர்ப்போம் இலக்கியம் எனின், மக்கள் வாழ்க்கைக் குறிக்கோளை இயம்புவது எனப் பொருள். இலக்கணம் என்றால், வாழ்க்கைக்குக் குறிக்கோளை இயம்பும் முறையை அமையப் பொருத்தும் முறை என்பர் வடமொழிவாணர். இலக்கியமும், இலக்கணமும், (இ)லட்சியம், (இ)லட்சணம் என்னும் வடசொற்களின் மூலம் வடிக்கப்பட்டவை என்பர். தூய தமிழ்ச்சொற்களை எல்லாம் தம் மொழியிலிருந்து வந்தவை என்கின்றனர் வடவர். ‘தமிழில் முகம் என்னும் சொல் இல்லை, வடமொழியிலிருந்து எடுத்துக் கொண்டது’ என்கின்றனர். ஆரியர்…
௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும் சொற்களும் திருத்தமும் – வி.பொ.பழனிவேலனார்
(௰க. தமிழ் கற்பிக்க வேண்டிய முறை-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும் சொற்களும் திருத்தமும் தமிழ்நலம் பேணும் தகையோர்க்கும், தமிழ் பயிற்றும் தமிழறிஞர்க்கும், தமிழாய்வு செய்யும் தனியர்க்கும் சிந்திப்பதற்கு ஒன்றுள்ளது. தமிழ்மொழி ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளாகப் பல சீர்கேடுகளுக்கு உள்ளாகி நலிவுற்று வருகிறது. இன்று தமிழ்மொழி ஒரு பல்கலப்பு மொழியாகக் காட்சியளிக்கிறது. தமிழில் எழுதினாலோ, பேசினாலோ பலர்க்குப் புரியவில்லை. அப்படிச் செய்பவர் ஏளனப் பேச்சுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளவர்க்குத் தமிழ் புரியவில்லை என்றால் தமிழ் வேறு எந்த நாட்டிற்குப் போகும்? தமிழில்…
க0. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா?-வி.பொ.பழனிவேலனார்
(௯. பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா?-வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௰. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா? க. தமிழ் மொழியுடன் வேற்றுமொழிச் சொற்கள் பெருமளவு கலக்கப்பட்டு பல்லாயிரம் தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்துவிட்டன. உ. தமிழ்மக்கள் பேச்சிலும், எழுத்திலும் தமிழ்ச்சொற்களைக் காண்பது அரிதாகிவிட்டது.௩. தமிழ்நாட்டில் வாழும் தமிழ்மக்களின் பெயர்கள் தமிழாக இல்லை.௪. தமிழ்நாட்டில் உள்ள கடைகள், தொழிலகங்களின் பெயர்கள் தமிழ்மொழியில் எழுதப்படவில்லை.ரு. தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்கள் பல தமிழல்ல. தமிழில் எழுதியுள்ள பெயர்களும் பிழைபட எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ் வழங்கவில்லை.எ. தமிழில் இப்பொழுது இந்திச் சொற்கள்…
௯. பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா?-வி.பொ.பழனிவேலனார்
(அ. தமிழும் – தமிழரும் -புலவர் வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௯. பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா? பிறமொழிக் கலப்பால் பிற மொழிகள் வளரலாம். ஆனால், தமிழ் அதற்குப் புறம்பானது. தமிழ் “உயர்தனிச் செம்மொழி” என்பதைப் பலர் அறியாமையால், பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்தால் தமிழ் வளம் பெறும் என்கின்றனர். இத்தகையோர் மொழி நூலறிவு அற்றவராவர். சமற்கிருதத்திலிருந்து தமிழ் பிறந்ததென்றும், அதனால் தமிழ்வளம் பெற்றதென்றும் பிதற்றும் பேதையர் பலராவர். இவர்தம் கூற்று முற்றும் பொய்யே! வடமொழிச் (சமற்கிருதம்) சொற்கள் தமிழில் கலந்தமையால் ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள்…
அ. தமிழும் – தமிழரும் -புலவர் வி.பொ.பழனிவேலனார்
(எ. தமிழும் – வடமொழியும்-புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் அ. தமிழும் – தமிழரும் தமிழ்நாட்டில் இன்று ஆரியர், ஆந்திரர், கன்னடர், துளுவர், கேரளர், துருக்கியர், ஆங்கிலோ-இந்தியர் முதலிய பலர் வாழ்கின்றனர். ஆயினும், பல்லாண்டுகளாக இங்கு வாழ்ந்து வருவதனால் இவர்கள் தம் தாய்மொழி “தமிழ்” என்றே மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் போதும், படிக்கவும், வேலைக்கு விண்ணப்பங்கள் கொடுக்கும் போதும் பதிவு செய்கின்றனர். அவர்கள் இல்லங்களில் ஒருவர்க்கொருவர் உரையாடும் போதும், உறவினர்களுடன் பேசும்போதும், அவரவர் உண்மையான தாய்மொழிகளாகிய சமற்கிருதம், தெலுங்கு, கன்னடம், துளுவம், மலையாளம்,…
எ. தமிழும் – வடமொழியும்-புலவர் வி.பொ.பழனிவேலனார்
(௬. கலைச்சொற்களின் தேவை-புலவர் வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் எ. தமிழும் – வடமொழியும் தமிழும் வடமொழியும் (சமற்கிருதம்) இறைவனது இரு கண்கள் என்பர் சிவனடியார்; வடமொழியினின்றுதான் தமிழ் தோன்றிற்றென்பர் வடமொழிவாணர். தமிழில் வடமொழிச் சொற்கள் கலந்ததால்தாம் தமிழ் வளம் பெற்றதென்பர் தமிழ்ப்பகைவர். சிவன் ஆரிய அகத்தியனுக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்பித்து, தென்னாட்டில் தமிழைப் பரப்பச் செய்தான் என்பது ஆரியர் கூற்று. மேற்கூறியவை மொழி நூலாராய்ச்சியும், தமிழின் இயல்பறிவும் இல்லாதார் கழற்றுரைகளாகும். தமிழ், திரவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமுமாகும் என்பது மொழிநூல் மூதறிஞர் ஞா….
ஆளுமையர் உரை 109 & 110 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக்கழகம்
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 109 & 110 ; என்னூலரங்கம் நிகழ்வு நாள் : ஆவணி 30, 2055 ஞாயிறு 15.09.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை இதழாளர்…