தலையங்க விமரிசனம் – 100 ஆவது அமர்வு
அன்புடையீர், பொருள்: நிகழ்ச்சி அறிவிப்பு – அழைத்தல் வணக்கம். தலையங்க விமரிசனம் என்ற பெயரில் கடந்த 2043 மார்கழி 8 /2012ஆம் ஆண்டு திசம்பர் 23 முதல் வாரந்தவறாமல் ஞாயிற்றுக்கிழமைதோறும் சென்னையில் அரங்கக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அமர்வுகளில் இதழாளர்கள், செய்தியாளர்கள், ஊடவியலாளர்கள் முதலானோர் பங்கேற்று அந்த வாரத்தில் முதன்மை நாளேடுகளில் வெளிவந்த தலையங்களில் காணப்படும் செய்திகள், கருத்துக்களைத் திறனாய்வு செய்து உரையாற்றுவது வழக்கம். ஊடகத்துறையில் உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள் இதில் கலந்துகொண்டு கருத்துகளைப் பகிர்ந்துகொள்வர். மக்கள் நலன் சார்ந்த கண்ணோட்டத்தில் செய்தியை…