சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! – பாவலர் கருமலைத்தமிழாழன்

சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! நீருக்குள் நிழல்தன்னைத் தேடல் போன்று நீர்த்துபோன அரசியலில் நியாயந் தன்னைப் பாருக்குள் கிடைக்குமென்று தேடு கின்றார் பரிதாப ஈழத்துத் தமிழ ரின்று ! வேருக்கு நீருற்றி ஐ.நா மன்றம் வேதனையைத் தீர்த்துவிடும் என்றி ருந்தால் பேருக்குத் தீர்மானம் போட்டோ மென்றே பெயர்த்திட்டார் நம்பிக்கை திட்ட மிட்டே ! பால்தருவார் பசிக்கென்று காத்தி ருக்கும் பச்சிளமைக் குழந்தைகள்போல் ஈழ மக்கள் ஆல்போன்று மன்றம்தாம் நிழலைத் தந்தே அநீதிக்குத் தண்டனைகள் வழங்கு மென்று கால்கடுக்க ஏக்கத்தில் நின்றி ருந்தால் கள்ளிப்பால்…

இலங்கையில் சிங்களருக்கு முன் இருந்தவர் தமிழரே! – துடிசைக்கிழார்

இலங்கையில் சிங்களருக்கு முன் இருந்தவர் தமிழரே கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டிலிருந்து சந்திரகுப்தன் அரசவைக்கு வந்த யவன தூதனாகிய மெகஸ்தனீசு என்பவர், தாம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வாகக் கேள்விப்பட்டதாகப் பாண்டியரைப் பற்றிக் கூறுகின்றபோது, “ஈராக்ளிசுக்குப் பாண்டேயா என்ற ஒரு பெண் பிறந்தாள். அவன் அப்பெண்ணிற்குத், தெற்கில் கடலைச் சார்ந்துள்ள ஒரு நாட்டை அளித்தான். அங்கு அவனது ஆட்சிக்குட்டப்பட்டவர்களை முந்நூற்று அறுபத்தைந்து ஊர்களில் பகுத்து வைத்து, ஒவ்வோர் ஊரினரும் ஒவ்வொரு நாளைக்கு அரசிக்குக் கப்பம் கட்ட வேண்டுமென்ற கட்டளையிட்டான்” என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில்…