மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 5
(முன்னிதழ்த் தொடர்ச்சி) போராளிகள் இனத்தைப் பேரழிவிலிருந்து பாதுகாத்து, எமது தாயக நிலத்தை அயலவனிடமிருந்து மீட்டெடுக்க எமது விடுதலை இயக்கம் அளப்பரிய ஒப்படைப்புகளைச் செய்துள்ளது. எமது மாவீரர்களின் இம்மகத்தான ஈகங்களால், எத்தனையோ தடவைகள் நாம் பேரழிவுகளின் விளிம்பிலிருந்து மீண்டிருக்கின்றோம். மரணத்தின் வாயிலுக்குச் சென்று மறுபிறவி எடுத்திருக்கின்றோம். வல்லாதிக்க ஆற்றல்களின் தலையீடுகளைத் தனித்து நின்று தகர்த்திருக்கின்றோம். . . . . . . . . . . . . ஆயுத வன்முறையில் ஆசைகொண்டு நாம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. இன அழிவை…