சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன் 106. Abiding கீழ்ப்படிகின்ற கடைப்பிடிக்கின்ற நெறிமுறைக்கு அல்லது விதிமுறைக்குக் கீழ்ப்படிகின்ற அல்லது அதனைக் கடைப்பிடிக்கின்ற செயல். 107. Abiding interest நிலை நலன் நிலையான அக்கறை அல்லது நிலையான ஆர்வம் கொண்டிருத்தலைக் குறிக்கிறது. ஒரிசா குத்தகைச் சட்டம், சொத்தில் நிலையான ஆர்வம் கொண்டவர், உறுதியாக .. . . . எப்போதும் நிலத்தில் நிலையான ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்…
சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 96-100 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 101. abide by arbitration பொதுவர் தீர்ப்புக்கு இணங்கு Abide – அமைந்தொழுகு, மதித்து நடத்தல்; எனினும் இணங்கு என்னும் சுருக்கச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. arbitration என்றால் நடுத்தீர்ப்பு என்கின்றனர். தீர்ப்பு என்றாலே நடுநிலையில்தான் இருக்க வேண்டும். நடுவர் தீர்ப்பு என்றும் சொல்கின்றனர். magistrate என்பவரை நடுவர் என்பதால் வேறுபாடு காட்ட வேண்டி உள்ளது. இரு தரப்பிற்கும் ஒத்திசைவு காண்பதற்குரிய பொதுவானவர் என்ற பெயரில் பொதுவர் எனலாம்….
சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 91. Abetment of suicide of child குழந்தைத் தற்கொலைக்கு உடந்தை குழந்தை அல்லது இளவர் தற்கொலை புரிந்துகொண்டால் அதற்கு உதவிய அல்லது உடந்தையாக இருந்து அல்லது தூண்டுதலாக இருந்தவர் தண்டிக்கப்படுவார். 18 அகவைக்குட்பட்ட / மனநலங் குன்றிய/பிற ழ் மனம் உடைய/மடமை மிகுந்த/போதையில் உள்ள/ எவரேனும் தற்கொலை புரிந்து கொண்டால், இதற்கு உடந்தையாக இருப்பவர் மரணத் தண்டனை அல்லது வாணாள் தண்டனை…
சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 86. Abetment of assault தாக்குதலுக்கான / தாக்க முனைதலுக்கான உடந்தை திடீரென, கடுமையான ஆத்திர மூட்டலினாலின்றித், தாக்குதல் நடத்துதல் அல்லது குற்ற வன்முறையைப் பயன்படுத்தல் இ.த.ச.பிரிவு 134 இன் கீழ்க் குற்றமாகும். தரைப்படையில் அல்லது கப்பற்படையில் அல்லது வான்படையில் உள்ள அதிகாரியோ வீரரோ மீகாமரோ(கப்பலோட்டி வீரர்) வான்படைஞரோ அலுவற்பொறுப்பை நிறைவேற்றும் எந்த ஓர் உயர் அதிகாரியைத் தாக்கினாலும் அஃது ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனைக்கும் தண்டத்தொகை விதிப்பிற்கும் உரியது. தாவு/தாக்கு …
சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 61-70 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 71. Abbreviate சுருக்கு நூல் முதலிய எதையும் சுருக்குதல், எனினும் குறிப்பாக ஒரு தொடரைச் சுருக்கித் தலைப்பெழுத்துச் சொற்களால் குறிப்பிடல்.திருவள்ளுவர் ஆண்டு என்பதைத் தி.ஆ. எனக் குறிப்பிடல்போல். காண்க: Abbreviation 72. Abbreviation குறுக்கம் குறியீடு சுருக்கக் குறியீடு குறுங்குறி குறிப்பெழுத்து சொல்குறுக்கம் சுருக்கீடு ஒரு சொல் அல்லது தொடரின் சுருக்கம். திருவள்ளுவருக்குப் பின் என்பதைத்…
சட்டச்சொற்கள் விளக்கம் 61-70 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 51-60 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 61-70 61. abate in equal proportion சம விகிதத்தில் குறைப்பு பங்குகளை முழுமையாகச் செலுத்த இறந்தவர் சொத்துகள் போதுமானவையாக இல்லாவிட்டால் அச்சொத்தின் பயனாளர்களிடம் சரிவிகிதமாகப் பகிர்ந்து குறைத்தல் என்பது போன்று இழப்புகளைச் சரி விகிதத்தில் குறைத்தல் மாகாண மாநகர நொடிப்புச் சட்டம் பிரிவு 49.2. 62. Abatement தணிவு அறவு தள்ளுபடி, விலக்கிவை நூப்பு, அற்றுப்போதல், குறைப்பு…
சட்டச்சொற்கள் விளக்கம் 51 – 60 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 41-50 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 51 – 60 51. Abandonment of a child குழந்தையைக் கைவிட்டுவிடுகை பன்னிரண்டு அகவைக்குக் கீழுள்ள குழந்தையை அதன் பெற்றோர் அல்லது காப்பாளர் அந்தக் குழந்தையை விட்டு முற்றிலுமாக விலகிச்செல்லவேண்டும் என்னும் கருத்துடன் ஓரிடத்தில் விட்டுச்செல்லுகை அல்லது பாதுகாப்பின்றி விடுதல். குழந்தையைக் கைவிட்டுவிடுகை (பி.317, இ.த.தொ.ச.) 52. abandonment of copyright பதிப்புரிமையைக் கைவிடல் Copyright என்பது பதிப்புரிமை, தனிப்பயனீட்டுரிமை. புத்தகத்தைப் பதிப்பித்து…
சட்டச்சொற்கள் விளக்கம் 21-25 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச்சொற்கள் விளக்கம் 11- 20: இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 21- 25 21. A One முதல் தரமான A என்பது ஆங்கில நெடுங்கணக்கின் முதல் எழுத்து. நிலையில், தரத்தில் முதலிடம் என்பதைக் குறிக்க இதனைப் பயன்படுத்தி ஏ ஒன்/A One என்கின்றனர். மிகச்சிறந்த, நல்ல, நேர்த்தியான முதலியவற்றைக் குறிக்க ஏ ஒன் / A One என்கின்றனர். 22. A Person ஓராள் ஓர் ஆள், ஆள், மாந்தன், ஒருவர், தனிப்பட்டவர், தனியாள் என்பனவும் இடத்திற்கேற்பப்…
சட்டச்சொற்கள் விளக்கம் 11- 20: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் – இலக்குவனார் திருவள்ளுவன் : 1-10 – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 11- 20 (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன்
சட்டச் சொற்கள் விளக்கம் – இலக்குவனார் திருவள்ளுவன் : 1-10
சட்டச் சொற்கள் விளக்கம் 1- 10 1. A bill further to amend மேலும் திருத்துவதற்குரிய வரைவம். வரைவத்தில் மேலும் திருத்தங்கள் தேவை என்பதை இது குறிக்கிறது. Bill-சட்டமாக இயற்றப்படுவதற்காக அளிக்கப்படும் சட்ட முன்வடிவு. சட்ட வடிவு பெறுவதற்கு ஏற்பிற்காக அளிக்கப்படும், சேர்க்கை, திருத்தம், மாற்றம் முதலிய திருத்தங்களை மேற்கொள்வதற்குரிய சட்ட வரைவு. சட்ட வரைவு என்றால் draft என்பதற்கும் bill என்பதற்கும் குழப்பம் வரலாம். எனவே, சட்ட வரைவம் > வரைவம் எனலாம். இந்திய…