89. இருள் வெருளி- Achluophobia/Lygophobia/Nyctophobia/Scotophobia இருள் (164), இருளி (6), இருளிய (9), இருளின் (1) என இருள் தொடர்பான சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து (திருமுருகு ஆற்றுப்படை : 10) அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி, (பெரும்பாண் ஆற்றுப்படை : 1) குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின் (மதுரைக் காஞ்சி : 195) உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள் (நற்றிணை : 68.8) நிலவும் இருளும்…