சசிகலாவின் நல்ல தொடக்கம் வெற்றியின் தொடக்கம் – இலக்குவனார் திருவள்ளுவன்

சசிகலாவின் நல்ல தொடக்கம் வெற்றியின் தொடக்கம்!   சசிகலா நடராசன் அதிமுக பொதுச்செயலராகப் பதவி ஏற்றதும் முதல்உரையாற்றியுள்ளார். பிறர் எழுதித் தந்ததாக இருந்தாலும் கருத்து அளித்ததும் வடிவமைத்ததும் இவராகத்தான் இருக்கும். அந்த வகையில் சிறப்பான உரை வாசித்துள்ளார். தொண்டர்களின் மனநிலைக்கேற்பவும் பொதுவான நலன் கருதியும் அமைந்த உரை நல்ல உரைகளுள்  ஒன்றாக இடம் பெறுகிறது எனலாம் அரசின் சார்பாக உரையாற்றுபவர்கள் பெரும்பாலும் எழுதி வைத்துள்ள உரையைத்தான் வாசிக்கின்றனர். எனவே, முதல் உரை வாசிப்பாக அமைந்ததில் குற்றம் எதுவுமில்லை. எனினும் மெல்ல மெல்ல வாசிப்பைக் கை…

செயலலிதா வழியில் பணியாற்றுவேன்! – சசிகலா

செயலலிதா வழியில் பணியாற்றுவேன்! – பொதுச்செயலர் பொறுப்பேற்று சசிகலா பேச்சு   அ.தி.மு.க. பொதுச் செயலாளராகச் சசிகலா  ( மார்கழி 16, 2047 / திசம்பர் 31, 2016 அன்று) பொறுப்பு ஏற்றார்.   இராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் எம்ஞ்சியார், செயலலிதா படங்களைத் தொட்டு வணங்கி விட்டுப் பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்ந்த அவர் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன்  நெறியாடல் நடத்தினார். பின்னர் முதல்மாடியில் உள்ள அரங்குக்குச் சென்று அ.தி.மு.க.  பொறுப்பாளர்கள் மத்தியில் பேசினார். ‘‘தலைமைக் கழகப் பொறுப்பாளர்களே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டக் கழகச் செயலாளர்களே,…

பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!   மக்கள் அறிந்தும் அறியாமலும் தவறு செய்பவர்களாக உள்ளனர். அறிந்தே தவறு செய்பவர்கள் அதனால் பெரும்பழி வந்தாலும் திருந்த மாட்டார்கள். ஆனால்,  பேரிழப்பிற்கும் பெருந்துன்பங்களுக்கும் ஆளாகும் பொழுது  தவற்றை உணருவார்கள். கண்கெட்ட சூரிய வணக்கம் மேற்கொண்டு என்ன பயன்? ஆனால், அறியாமல் தவறு செய்பவர்கள் அதனைப் பிறர் சுட்டிக்காட்டும் பொழுது் திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களும் அறிந்தே தவறு செய்பவர்களே!   அதிமுக தலைவியின் செயலொன்று ஊடகங்களாலும் மக்களாலும் அங்கதமாகவும் கேலியாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறப்பட்டாலும்…