நல்லதோர் வீணை செய்தே… – தி.வே. விசயலட்சுமி
நல்லதோர் வீணை செய்தே… நாட்டு விடுதலையைத் தன் உயிர்மூச்சாகக் கருதி, வீர விடுதலை வேண்டி, வேறொன்றும் கொள்ளாது நின்ற மகாகவி பாரதியார், விடுதலையை மாற்றாரிடமிருந்து பெறுமுன், இந்திய இனம் பெண்மைக்கு விடுதலை அளிக்க வேண்டுமென விரும்பினார். பெண் விடுதலை இயக்கம் உருவானது. பாரதியார் “பெண்மை வெல்க” எனக் கூத்திட்டார். “பெண்ணறத்தினை ஆண் மக்கள் வீரந்தான் பேணுமாயின் பிறிதொரு தாழ்வில்லை” என்று எடுத்துக்கூறினார். சக்தியும், சிவனும் இணைந்து செயற்பட்டால் வெற்றி பெறுவது திண்ணம் என உணர்ந்து, விடுதலைப் போராட்ட வேள்வியிலே பெண்ணினத்தை ஈடுபடுத்த வேண்டினார். “ஆணுக்குப்…