கலைச்சொல் தெளிவோம்! 162. வெகுள்பு வெருளி-Angrophobia; 163. வெள்ள வெருளி-Antlophobia
கலைச்சொல் 162. வெகுள்பு வெருளி-Angrophobia வெகுண்டனள்(1), வெகுண்டு(6), வெகுள்(1)வெகுள்வர்(1), வெகுள்வாய்(1), வெகுள்வோள்(1), வெகுளி(4), வெகுளும்(1) என்பன வெகுள்வதை அடிப்படையாகக் கொண்ட சங்கச் சொற்கள் உள்ளன. வெகுளி பற்றிய இயல்பு மீறிய பேரச்சம் வெகுள்பு வெருளி–Angrophobia கலைச்சொல் 163. வெள்ள வெருளி-Antlophobia சங்க இலக்கியங்களில் வெள்ளம் என்பதுசில இடங்களில் பேரெண்ணைக் குறிக்கும் வகையில் வந்துள்ளது. வெள்ளப்பெருக்கு குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் வெள்ள வெருளி-Antlophobia – இலக்குவனார் திருவள்ளுவன்