சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14 : நிலம் பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே!- இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 13: உழவும் தொழிலும் சிறக்கட்டும்; செல்வம் பெருகட்டும்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14 நிலம் பெயர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே! “நிலம்பெயரினும் நின்சொற் பெயரல்” – புறநானூறு, பாடல் எண்-3, அடி 14. பாடியவர்: இரும்பிடர்த் தலையார்பாடப்பட்டோர்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதிதிணை : பாடாண்துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம் நில நடுக்கம் ஏற்பட்டு, இடம் பெயர்ந்தாலும் நீ சொன்ன சொல்லில் இருந்து தவறிச் செல்லாதே…