இலக்குவனார் விளக்கும் இல்லற மாட்சி– இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனார் விளக்கும் இல்லற மாட்சி தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் முதலியவற்றை மக்கள் இலக்கிமாக மாற்றியவர்; சொற்பொழிவுகள், மாலை நேர வகுப்புகள், விடுமுறைக்கால வகுப்புகள், நூல்கள், இதழ்கள் வாயிலாக இலக்கியங்களின் மூலம் தமிழ் மொழியின் தொன்மை, இலக்கியச் சிறப்பு, பண்பாட்டுச் செழுமை, நாகரிக வளமை முதலியவற்றை மக்களின் உள்ளங்களில் பதித்தவர். “வள்ளுவர் கண்ட இல்லறம்” நூல் மூலம் இல்லறத்தின் சிறப்பை அவர் எடுத்துரைத்தார். அவற்றுள் சிலவற்றை நாம் பார்ப்போம். இல்லத் தலைமைக்குரியவர்கள் பெண்களே! பெண்ணுரிமையைப் போற்றிப் பெண்களுக்கான தலைமையை…
வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 2.
(வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார்:1. தொடர்ச்சி) வள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 2. வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை ங. களவியல் (வரிசை எண்கள் / எழுத்துகள் ‘ங’கரத்திலிருந்து குறிக்கப் பெறுகின்றன.) இல்வாழ்க்கை இல்லாளோடு கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படும். ‘இல்லாள்’ என்பது வீட்டிற்குரியாள் எனும் பொருளைத்தரும். ‘இல்லான்’ என்பதோ ஒன்றும் இல்லான், வறியன் எனும் பொருள்களைத் தரும். ஆதலின், இல்லத் தலைமைக்குரியவர்கள் பெண்களே எனத் தமிழ்முன்னோர் கருதியுள்ளனர் என்றும் பெண்ணினத்தின் முதன்மையைப்…
அரிசுடாடில் விளக்காதவற்றைத் திருவள்ளுவர் விளக்கியுள்ளார் – அறிஞர் சி.யூ.போப்பு
அரிசுடாடில் விளக்காதவற்றைத் திருவள்ளுவர் விளக்கியுள்ளார் பணிவு, அறம், தீங்கினைப் பொறுத்தல் ஆகிய கிருத்துவப் பண்புகள் அரிசுடாடிலால் விளக்கப்படவில்லை…. தமிழ்நெறியாளரால் இம்மூன்றும் பதியும்படி வலியுறுத்தப்படுகின்றன. இம்மூன்றுமே சிறந்த பாக்களான திருக்குறளின் மையக் கருத்துகளாகும். எனவே, நாம் இத்தமிழ்ப் புலவரைக் கிருத்துவராக அழைக்கலாம். -அறிஞர் சி.யூ.போப்பு