தானியங்கிப் பொறியில் பணம் எடுக்க எண்ணிக்கைக் கட்டுப்பாடு வருகிறதாம்!
வங்கிக்குச் செல்லாமல் எந்நேரமும் பணம் எடுக்கும் வாய்ப்பினை எல்லா நேரத் தானியங்கி மையங்கள் அளித்து வருகின்றன. தான் கணக்கு வைத்துள்ள வங்கிகியின் தானியங்கிப் பொறியில் மட்டுமல்லாமல் பிற வங்கிகளின் தானிப்பொறிகளிலும் பணம் எடுக்கும் வாய்ப்பைக் குறைத்துப் பிற தானிப் பொறிகளில் மாதத்திற்கு 5 தடவைக்குமேல் எடுத்தால் கட்டணம் என அறிமுகப்படுத்தினர். இப்பொழுது் கணக்கு வங்கி, பிற வங்கி என்ற வேறுபாடின்றி ஒருவர் மொத்தமாக மாதம் ஐந்து தடவைக்குமேல் தானிப் பொறியைப் பயன்படுத்தினால் கட்டணம் பெற இந்திய வங்கிகள் சங்கம், சேம(ரிசர்வு) வங்கிக்குப் பரிந்துரைத்துள்ளது….