கலைச்சொல்  114-119. தனிமைத் தொடர்பான வெருளிகள் எமி யேந்துணிந்த வேமஞ்சா லருவினை (குறிஞ்சிப். 32). எமியம் (8), எமியேம்(1), எமியேன்(1), தமி (3) தமித்தது(1), தமிய(3), தமியம்(2), தமியர்(11), தமியள்(6), தமியன்(5), தமியார் (1), தமியென்(1), தமியேம்(1), தமியேன்(1), தமியை(4), தமியோர்(3), தமியோன்(1), தனி(27), தனித்தலை(1), தனித்து(4), தனித்தனி(1), தனிப்போர்(1), தனிமை(3), தனியவர்(1), தனியன்(2), தனியே(3), தனியை(2), தனியோர்(2) ஆகிய சொற்கள் தனி என்னும் அடிப்படையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. தனிமையினால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம். தனியர் வெருளி-Anuptaphobia எமிய வெருளி- Eremo…