சட்டச் சொற்கள் விளக்கம் 1021-1025 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1016-1020 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1021-1025 1021. Auxiliary force துணைப்படை துணைப் படையினர் என்பது படைத்துறை அல்லது காவல்துறைக்கு உதவும் துணைப் பணியாளர்கள். ஆனால் வழக்கமான படைகளிலிருந்து மாறுபட்டு ஒழுங்கமைக்கப்பட்டவர்கள். துணைப் படையினர் என்பது ஆதரவான செயற்பாடுகளை மேற்கொள்ளும் அல்லது கோட்டைக் காவற்படை போன்ற சில கடமைகளைச் செய்யும் படைசார் தன்னார்வலர்களாக இருக்கலாம். ஒரு துணைப் படை வழக்கமான வீரர்களைப் போலவே பயிற்சி அல்லது தரவரிசை அமைப்பைக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. மேலும் அஃது ஒரு…
