88. ஆழ்பு வெருளி-Bathophobia  ஆழ்(14), ஆழ்க(1), ஆழ்ச்சி(2), ஆழ்ந்த(2), ஆழ்ந்தன்று(1), ஆழ்ந்து(1), ஆழ்பவன்(1), ஆழ(1), ஆழல்(1), ஆழல(1), ஆழி(24), ஆழிமுதல்வ(1), ஆழியான்(1), ஆழும்(1), என ஆழ் அடிப்படையிலான சொற்கள் சங்கப்பாடல்களில் உள்ளன. ஆழ்நிலையில் உள்ளமையால் ஆழி என்பது கடலையும், மண்ணில் ஆழ்ந்து பதிதலால் சக்கரமும் ஆழி என்றும், துன்பத்தில் ஆழ்வதால் ஏற்படும் அழுகையும் ஆழ் என்றும் (ஆழல்-அழாதே) (அழுகை என்பதன் வேர்ச்சொல் நீட்டிப்பு போன்று), பிற பொருளிலும் இச் சொல் அமைந்துள்ளதைக் காணலாம். ஆழ் என்பதன் அடிப்படையில் ஆழ்பு எனக் கொண்டு, ஆழம் பற்றிய…