கலைச்சொல் தெளிவோம்! 90. ஈரிட வாழ்வி வெருளி-Batrachophobia
90. ஈரிட வாழ்வி வெருளி-Batrachophobia பொன்னால் வளைத்து இரண்டு சுற்றாக அமைக்கப்பட்ட காற்சரி என்னும் கால்நகையைக் குறிப்பிடுகையில் கலித்தொகை(85.1) ஈரமை சுற்று என்கின்றது. கீழும் மேலுமாக அமைந்த நீச்சல் உடை ஈரணி எனப்படுகின்றது. ஈரறிவு (பதிற்றுப்பத்து : 74.18), ஈருயிர்(அகநானூறு : 72.12), ஈரெழுவேளிர்(அகநானூறு :135.12), ஈரைம்பதின்மர் (புறநானூறு : 2.15; பதிற்றுப்பத்து : 14.5; பெரும்பாணாற்றுப்படை 415) என இரண்டின் அடுக்கு சுட்டப்படுவதைப் பார்க்கிறோம். வாழ்(17), வாழ்க்கை(60), வாழ்க(25), வாழ்கல்லா(1), வாழ்குவன்(1), வாழ்ச்சி(1), வாழ்த்த(10), வாழ்த்தி(20), வாழ்த்தினர்(1), வாழ்த்தினெம்(1), வாழ்த்தினேம்(2), வாழ்த்து(2), வாழ்த்தும்(2),…