62. அடர்-blade  அடர் அடர் என்பது மெல்லிய தகட்டையும்(thin, flat metal plate) குறிக்கும்; பூவின் மெல்லிதழையும்(flower petal) குறிக்கும். அழல்புரிந்த அடர் தாமரை (புறநானூறு: 29:1) (பொன் தகட்டால் ஆகிய தாமரை) நுண்ணுருக்கு உற்ற விளக்கு அடர்ப்பாண்டில் (மலைபடுகடாம் : 4) (உருக்கி அடரால் செய்யப்பெற்றது வெண்கலத்தால் ஆகிய தாளம்) அடர்பொன் அவிர்ஏய்க்கும் அவ்வரி வாடச் (கலித்தொகை : 22:19) (பொன்தகடு போல் விளங்குவது அழகிய சுணங்கு) அடர்செய் ஆய்அகல் சுடர்துணை ஆக (அகநானூறு : 19:17) (தகட்டால் அகல்விளக்கு செய்தனர்) இவ்வரிகளில்…