நோபல் பரிசாளர் பன்முகக்கலைஞர் பாடலர் பாபு தைலன் -சந்தர் சுப்பிரமணியன்
நோபல் பரிசாளர் பன்முகக்கலைஞர் பாடலர் பாபு தைலன் (Bob Dylan) வழக்கம்போல் 2016-ஆம் ஆண்டுக்கான நோபல்பரிசு குறித்த செய்திகள் வரத்தொடங்கிய கடந்த ஒரு மாதக்காலத்தில், பரிசாளர்கள் பட்டியல் குறித்த பல தகவல்கள் ஊடகங்களில் உலவத் தொடங்கின. நோபல் பரிசுகளில் மிக முதன்மையான பரிசான இலக்கியப்பரிசு இந்த ஆண்டு யாருக்கு என்று அதனதன் நோக்கில் அலச ஆரம்பித்தது ஊடகம். அக்டோபர் 6 ஆம் நாள், ‘நியூ (இ)ரிபப்ளிக்கு / new republic‘ என்னும் நாளிதழ், இலக்கியப்பரிசு குறித்த ஒரு கட்டுரையில் “பாபு தைலனுக்கு விருதா?…