திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 9 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 9 திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம். 9 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. (திருவள்ளுவர், திருக்குறள் 306) தீப்பிழம்பில் முக்கி எடுததாற்போன்ற தீமை செய்தாலும் சினம் கொள்ளாதே என்கிறார் திருவள்ளுவர். நெருப்பு குறித்து முன்னரே குறிப்பிட்டிருந்தோம். நெருப்பு அல்லது ‘தீ’ என்பது வெப்பத்தை வெளியேற்றும் வேதியியல் செயல், ‘தீ’ என்பது, பொருட்களில்…