சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 06 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
(சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 05 – இன் தொடர்ச்சி) 6/6 இர.சிறீகந்தராசா: நீங்கள் எவ்வளவு காலம் மொத்தமாக உள்ளே இருந்தீர்கள்? து.வரதராசா: மூன்றரை மாதங்கள் இருக்கும். இர.சிறீகந்தராசா: நீங்கள் வெளியில் வந்ததும் அங்கே என்ன செய்தீர்கள்? து.வரதராசா: நாங்கள் வெளியில் வந்தவுடன் கடமையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது. ஏனென்றால், எங்களை மீண்டும் கடமையாற்ற விடுவதற்குப் பாதுகாப்பு அமைச்சு, இராணுவ அமைச்சு ஆகியவற்றிடம் இருந்து நலவாழ்வுத் திணைக்களத்திற்கு ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த நடவடிக்கையை எடுப்பதற்குக் கொஞ்ச காலம் எடுத்தது. அதன் பின்புதான்…
மனித நேயர் ஊடகப்போராளி மேத்தியூ இலீயை ஐ.நா. வெளியேற்றியது!
ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த மேத்தியூ இலீயை ஐ.நா.வலுக்கட்டாயமாக வெளியேற்றியது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புலம்பெயர் தமிழ்த் தலைமைகள் வரை எல்லா அமைப்புகளும் ‘ஐக்கிய நாடுகள் அவையை நம்பினோர் கைவிடப்படார்’ என மக்களை ஏமாற்றி வருகின்றன. ௨௦௦௯ (2009)-ஆம் ஆண்டு இனப்படுகொலை தொடங்கிய நாளிலிருந்தே இந்த ஏமாற்று வேலை மிகு வேகத்தில் தொடங்கி விட்டது. புலிகளையும் அதன் தலைவர்களையும் மக்களோடு சேர்ந்து வன்னியில் குந்தியிருக்குமாறு இத்தலைமைகள் அறிவுரை வழங்கின. அங்கு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் அவையும் திடீரெனத் தோன்றிக் காப்பாற்றிவிடும் என்று ஏமாற்றினர்….
சிங்கள அரசு செய்தது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலையே: வைகோ
இலங்கைத் தீவில் சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2009 இல் போரின் உச்ச கட்டத்தின் போது, சிங்கள இராணுவத்தினர் ஈழத் தமிழ்ப் பெண்களை வதைத்துக் கொன்ற காட்சி புதிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது. அந்தக் கொடுமையை எழுத்தில் பதிய என் மனம் மறுக்கிறது. ஐயோ! இப்படியும் ஒரு கொடுமையா? என்று புலம்பி தவிக்கிறது….