தனிமங்கள்(Chemical Elements) – இலக்குவனார் திருவள்ளுவன்
பெட்டகம் தனிமங்கள்(Chemical Elements) அணுக்கள் பல இணைந்தவையே பொருள்கள். இவற்றுள் ஒரே வகை அணுக்கள் பல சேர்ந்தது தனிமம்(நடநஅநவே) எனப்படுகிறது. ஒரு தனிமத்தின் அணுவைப்போல் மற்றொரு தனிமத்தின் அணு இருக்காது. ஆதலின் ஒரே அணு எண் கொண்ட அணுக்களால் முழுவதுமான பொருளே தனிமம் ஆகும். சான்றாக இரும்பு ஒரு தனிமம். இதில் இரும்பு அணுக்களின் பொருளைத் தவிர வேறு எந்தப் பொருளின் அணுக்களும் இரா. தனிமமானது மாழை(உலோகம்), அல்மாழை(அலோகம்) என இருவகைப்படும். இயல்பான நிலையில் தனிமங்கள் திண்பொருளாகவும்(எ.கா. பொன், செம்பு) நீர்ப்பொருளாகவும் [(எ.கா. …