கலைச்சொல் தெளிவோம் 47 : சிமிழ்-chip
47 : சிமிழ்–chip சிப்-செதுக்கல், சில்லு எனக் கணிணியியலில் குறிக்கின்றனர். கணிணியியலில் சிப் என்பது செதுக்கும் பணியைக் குறிக்கவில்லை. மின்னணுச் சுற்றுகள் அடங்கிய சிறு கொள்கலனைக் குறிக்கிறது. பல்புரிச் சிமிலி நாற்றி (மதுரைக் காஞ்சி 483) எனப் பொருள்களை ஏந்தித்தாங்கும் உறியைச் சிமிலி எனக் குறித்துள்ளனர். சிமிலி என்னும் சங்கச் சொல்லின் அடிப்படையில் பிறந்ததே சிமிழ். ‘சிமிழ்’ என்பது சிறு கொள்கலன்தான். எனவே, செதுக்கல், சில்லு என்று எல்லாம் சொல்லாமல் ‘சிமிழ்’ என்றே குறிக்கலாம். சிமிழ்-chip