வைகோவிற்கு அழகல்ல! – இலக்குவனார் திருவள்ளுவன்
வைகோவிற்கு அழகல்ல! உலக மக்களால் போற்றப்படும் மக்கள் நலத்தலைவர் வைகோ. அவரது கடும் உழைப்பும் விடா முயற்சியும் வாதுரைத்திறனும், அநீதிக்கு எதிரான போராட்டக் குணமும் மாற்றுக்கட்சியினராலும் பாராட்டப்படுகின்றன. ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துத் தமிழின உணர்வாளர்களின் நெஞ்சில் இடம் பதித்துள்ளார். இருப்பினும் அவர் புகைச் சுருள் (cigarette) விற்பனை தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துகள் அவரது பண்பிற்கு ஏற்றதல்ல! அவருக்குப் பெருமை சேர்ப்பதுமல்ல! மது விலக்கு வேண்டிப்போராடும் வைகோவிடம் செய்தியாளர் ஒருவர் அவரின் மகன் புகைச்சுருள் முகவராக உள்ளதுபற்றிக் கேட்டதற்குத் தான்…