கலைச்சொல் தெளிவோம்! 70. மஞ்சு-cumulus
70. மஞ்சு-cumulus மஞ்சு (11) விசும்பிற்கு மேற்பட்ட நிலையில் ஈராயிரம் பேரடி(மீட்டர்) தொலைவில் உள்ள முகிலை அடுத்துப் பார்ப்போம். பின்வரும் பாடல் அடிகள் மழையைச் சுற்றி மஞ்சு எனப்படும் முகில் கூட்டம் அமைந்துள்ளதை விளக்குகின்றன. மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த (நற்றிணை: 154:1-4) மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து (கலித்தொகை: 49.16) அகல்இரு வானம் அம்மஞ்சு ஈன(ப்), (அகநானூறு: 71.8) முனைசுட வெழுந்த மங்குல் மாப்புகை மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும் (புறநானூறு:103: 6.7) மஞ்சு…