தேனிப் பகுதியில் என்புமுறிவுக் காய்ச்சல் (டெங்கு) பரவும் பேரிடர்

தேனி அருகே உள்ள குள்ளப்புரம் ஊராட்சியில் என்புமுறிவுக் காய்ச்சல் பரவும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. குள்ளப்புரம், மருகால்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, புதூர் முதலான ஊர்களில் ஏறத்தாழ 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லை. மேலும் குள்ளப்புரம் ஊராட்சியில் ஊராட்சிச் செயலாளர் இல்லை. ஏற்கெனவே இருந்த ஊராட்சிச்செயலாளர் பதவி உயர்வு பெற்று மாறுதலாகிவிட்டார். இதனால் ஊராட்சியில் எந்த வித மக்களின் அடிப்படைச்சிக்கல்களும் கவனிக்கப்படவில்லை. மேலும் குடிநீர், சாக்கடை வசதி, மின்வசதி எதுவும் நடைபெறவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்….

பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் என்புமுறிவு நோய் (Dengue fever) பரவும் பேரிடர்

தேனிஅருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் என்புமுறிவு நோய் (Dengue fever) பரவும்   பேரிடர் உள்ளது. பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஏறத்தாழ 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் வணிக நிமித்தம் காரணமாகப் பெங்களுர், மைசூர், மும்பை போன்ற இடங்களுக்குச் சென்றுவிடுவார்கள். அதே போல அண்டை மாநிலமான கேரளாவிற்கும் வேலைக்காகச் சென்றுவிடுவார்கள். வருடத்தில் பொங்கல், இரம்சான், ஈகைத்திருநாள் (பக்கிரீத்து), தீபாவளி முதலான பண்டிகையின்போது மட்டும் அனைவரும் ஒன்று கூடுவார்கள். இந்நிலையில் பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறைவு உள்ளது. இதனால் பொதுமக்களின் அடிப்படைச்சிக்கல்களான குடிநீர், சாக்கடை வசதி,…