பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! : 1
தமிழனாய்ப் பிறந்ததால் வாழ்வைத் தொலைத்த பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! : 1 வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன் அவரது வழக்கறிஞர் மூலமாக இளைய விகடனுக்குச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது! 25 ஆண்டுகள் முடிந்துவிட்டன. நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. இஃது, ஏதோ அரசியல் வானில் அடியெடுத்துவைத்து அடைந்துவிட்ட பெரும் பதவியின் ஆர்ப்பாட்டமான வெள்ளிவிழா அல்ல… கலைத்துறையில் எனது 25 ஆண்டு அருவினையின் – சாதனையின் -வெற்றிக்கொண்டாட்டம் என நினைத்துவிடாதீர்கள். இருள்சூழ்ந்த…