கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு வங்கிக்கணக்கேடும் ஆவணமாகும்.
தென்மண்டிலக் கடவுச்சீட்டு அலுவலகம், கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான ஆவணங்களுள் ஒன்றாகப் பொதுத்துறை வங்கிகளின் கணக்கேடு-வங்கிக்கணக்கு விவரங்களை ஏற்று அறிவித்துள்ளது.இதனை அறிவித்துள்ள சென்னை மண்டிலக் கடவுச்சீட்டு அலுவலர் செந்தில் பாண்டியன் பின்வரும் வங்கிகள் அவ்வாறு ஏற்பதற்குரியன என அறிவித்துள்ளார்: அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி,பரோடா வங்கி,இந்தியா வங்கி, மகாராட்டிரா வங்கி, கனரா வங்கி, இந்தியா மைய வங்கி, கூட்டாண்மை வங்கி(கார்ப்பரேசன் வங்கி) , தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் கடலோடி வங்கி (ஓவர்சீசு வங்கி), கீழ்த்திசை வணிக வங்கி(ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சு), பஞ்சாப்பு…