இயன்றவரை உதவுங்கள்!
இயன்றவரை உதவுங்கள்! இனப்படுகொலைப்போரில் இந்த உடன்பிறந்தாளுக்கு ஓர் ஆண், ஓரு பெண் என இரு குழந்தைகள் . இவருக்குத் தற்போது உதவி தேவை தன்னால் சொந்தமாக ஒரு தொழில் செய்யமுடியும் எனவும், தனக்கு ஆடு வளர்ப்பு செய்ய பணம் தேவை எனவும் பண உதவி செய்ய யாரும் முன் வந்தால் தன் இரு குழந்தைகளையும். தன்னால் நல்ல கல்வி கொடுத்து வளர்த்து எடுக்க முடியும் என்றும் தெரிவித்து உதவி வேண்டுகிறார். உதவும் உள்ளங்கள் உதவுங்கள்! தொடர்பு இலக்கம்:-009477 549 9988 சிறீகாந்த சீவா கிளிநொச்சி…
நாட்டுக்காக இரு பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு உதவுக!
நாட்டுக்காக இரு பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு உதவுக! பட்டினியால் கதறியழும் தாய்! இனப்படுகொலைப்போரின் கொடூரத்தில் இரு கண் பார்வையினை இழந்து தவிக்கும் மகள். நாட்டுக்காக தன் இரு மக்களைப் பறிகொடுத்துவிட்டுப் பட்டினியின் கொடூரத்தில் வாழ வழியின்றிக் கதறி அழும் தாயின் அவலம். உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உயிரைக்காப்பாற்ற நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள். தொலைபேசி இலக்கம்; 0094776553238 வங்கிக் கணக்கு இலக்கம்: எசு.நாகேசுவரி 016020540202, அட்டன் தேசிய வங்கி (HNB) https://youtu.be/nnp5yFzyRu0
சீவனாவின் கனவை நிறைவேற்றுங்கள்!
சீவனாவின் கனவை நிறைவேற்றுங்கள்! போரின் நெருப்பில் சிரிப்பை இழந்த மழலை! தீருமா அவளின் வேதனை? 2009 ஆம் ஆண்டு 3 ஆம் மாதக் காலப்பகுதியில் தமிழின அழிப்பின் மிக உச்சக்கட்ட நடவடிக்கைகள் புதுமாத்தளன் பகுதிகளில் நடந்து கொண்டிருந்தன. அத்தருணத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் துடிதுடித்து இறந்து கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் மிகக் கொடூரமாக அங்கவீனமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். முல்லைத்தீவு உடுப்புக்குள ஊரைச் சேர்ந்த இரத்தினராசா சீவனா (அகவை 11) என்னும் சிறுமி, படுகொலை நடவடிக்கையில் சிக்கிப் போர்க்காயங்களுடன் ஊனமாக்கப்பட்டு மீண்டுள்ளார். 2009 ஆம்…
நவநேசனின் தற்றொழிலுக்கு உதவுவோம்!
தளபதி கிட்டு குண்டுவீச்சுக்கலன் படையணி நவநேசனின் இன்றைய இரங்கத்தக்க நிலை! நந்தகுமார் நவநேசன். ஈழத்தையும், ஈழமக்களையும் நேசித்த காரணத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,அல்லது சிங்களத் தேசியக் கூட்டமைப்பு போன்ற வேட்டிகட்டிய தலைவர்களினால் கைவிடப்பட்ட நிலையில், 2009 இறுதிப் போரில் முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டு இடுப்புக்குக் கீழே இயங்காமல், தனது மருத்துவம் ஒரு பக்கம் தனது வாழ்க்கைச் சுமை மறு பக்கம் எனத் தனது அன்றாட வாழ்க்கையைக் கூடக் கொண்டு செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றார். எனினும் தன்னால் ஒரு தற்றொழில்…
ஈழப் புரட்சிப் பாடகர் சாந்தனுக்கு உதவுங்கள்!
ஈழப் புரட்சிப் பாடகர் சாந்தன் அவர்களுக்கு உடனடியாக உதவுங்கள்! ஈழத்தின் வலிகளையும் மாவீரர் பெருமைகளையும் களமாடிய கண்ணியங்களையும் கரிகாலன் செயற்பாடுகளையும் தேன்குரலில் உலகமெங்கும் கொண்டுசென்ற ஈழத்தின் இசைக்குயில், எமதன்பிற்கினிய சாந்தன் அண்ணா அவர்கள் இன்று தனது இரண்டு சிறுநீரகங்களும் வலுவிழந்த நிலையில் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக இரத்தத் தூய்மை செய்து கொண்டு, அந்த நாளுக்காகக் காத்திருக்கின்றார். மாற்றுச் சிறுநீரகமும் ஆயத்தமான நிலையில் அதற்கான நிதியுதவி மட்டுமே தாழ்ச்சியாகின்றது. உடனடியாக மாற்றுச்சீரகம் பொருத்த வேண்டும் என்ற மருத்துவர்களின் எச்சரிக்கை இப்போதைய செய்தி. …