அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்! நண்பர் நந்தவனம் சந்திரசேகர் அழைப்பால், இரு வாரம் முன்னர் எனக்குப் பருமாவிற்குச்செல்லும் வாய்ப்பு வந்தது. எனவே, பேசுவதற்குக் குறிப்புகள் எடுப்பதற்காகப் பருமாவில் உள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை, தமிழர், தமிழ் நிலைமைகள் ஆகியவற்றை அறிவதற்காக இணையத் தளங்களில் விவரங்கள் தேடினேன். ஆனால், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும்…