எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 – பேரா.சி.இலக்குவனார்
எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 தோள்களும் கொங்கையும் நாள்தொறும் வளர்ந்தன வளர்மதி யன்ன வாண்முகம் பொலிந்தன கொடியிடை துவள அடிபெயர்த் திட்டாள் மணத்தின் சுவையை மனத்துட் கொண்டாள். வெள்ளப் பெருக்கை மெல்லிய நாணற் புதர்கள் தடுக்கப் பொருந்திய வாறு காதல் மடைக்கிடு கற்களாய் நின்றனர் மெல்லக் கசிந்து மேவிய கற்களைத் தள்ளிடும் நீரின் தன்மை போன்ற காதலின் தன்மை கண்டவ ரல்லரே; “உருவுங் குணனும் ஒத்த பான்மையிற் காத லிருவர் கருத்தொரு மித்தபின் குலனு மோரார் குடியு மோரார்…
எழிலரசி அல்லது காதலின் வெற்றி – பேரா.சி.இலக்குவனார்
எழிலரசி அல்லது காதலின் வெற்றி உலகினிற் சிறந்த வுயர்கலா புரியில் வணிக னொருவன் வான் பெருஞ் செல்வனாய்ச் சீருடன் வாழ்ந்து செல்லுங் காலை புதல்வர் மூவரும் புதல்வி யொருத்தியும் 5. எச்சமாய் நிற்க இச்சையி னீட்டிய அருநிதி துறந்து ஆவி நீத்தனன் பெற்றோ ரீட்டிப் பேணிய பொருளை மைந்தரைப் போலவே மகளிர் தமக்கும் உரிமை யாக்கும் ஒருவிதி நினைந்து தந்தை மாய்ந்தபின்தனயர் மூவரும் பொருள்மீ துற்ற பெருவேட் கையினால் தம்முடன் பிறந்த தங்கை நன்மணம் பெறுவா ளென்னிற் பெரும்பொருள்…