சென்னையில் ‘குடியம்’ ஆவணப்படம் திரையிடல்
புரட்டாசி 02, 2046 /19-09-2015 மாலை 05.00 தாகூர் திரைப்பட மையம் இராசா அண்ணாமலைபுரம் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரிலிருந்து 20 புதுக்கல் தொலைவில் உள்ள குடியம் எனுமிடத்தில் பழையகற்காலத்திலுள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அந்தப் குதிகளிலுள்ள குகைகள், பாறையமைவுகள் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை விளக்கும் ஆவணப்படமே இந்தக் ‘குடியம்’. இதன் மூலம் தமிழர்களின் தொன்மம் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறியலாம். இங்குள்ள ஒவ்வொரு பாறையும் 140 பேரடி(மீட்டர்) உயரமுள்ளவை. இதுகுறித்து ஆவணப்படத்தில் அறிஞர்கள் கருத்துரைகள் இடம் பெறுகின்றன. …