திரைத்துறையினரே! பரத்தமை(விபச்சார)ப் போக்கு முறைதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்
திரைத்துறையினரே! பரத்தமை(விபச்சார)ப் போக்கு முறைதானா? உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்.(திருவள்ளுவர், திருக்குறள் 813) கிடைக்கும் பயனை அளந்து பார்த்துச்செயல்படுவதும் தமக்குத் தரக்கூடிய பொருளின் அடிப்படையில் உடலை விற்பவரும் திருடர்களும் இணையானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். தமிழில் படங்கள் எடுத்துத் தமிழர்களின் செல்வத்தால் செல்வமும் புகழும் சேர்க்கும் நீங்கள் இத்தகையவரா இருக்கலாமா? பயன் அளந்து பழகுபவரும் பரத்தையர்களும் ஒன்றுதான் என்கிறார் திருவள்ளுவர். நீங்களும் அவ்வாறுதானே நடந்து கொள்கிறீர்கள்? உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா? உங்களில் சிலர் விலைமக்கள்…