இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40 சின்னச்சாமி 1965 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் முழுவேகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் ஆதரவு வழங்கினர். ஒரு சிலர், இந்தி மொழித்திணிப்பால் தமிழ்நாட்டுக்கு உண்டாகக்கூடிய துன்பத்தை எண்ணித் தம்மையே மாய்த்துக் கொண்டனர். அவர்களுள் முதன்மையானவர் சின்னச்சாமி என்பவர். இவர் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்ப்பற்று மிகுந்த அன்பர். அறிஞர் அண்ணா அவர்களின் பேரன்பிற்கு உரியவராக…