கலைச்சொல் தெளிவோம் 53: இடங்கர்-crocodile; கராஅம்-alligator; முதலை-gavial
53: இடங்கர்-crocodile; கராஅம்-alligator; முதலை-gavial குரோகடைல்(crocodile), அலிகேட்டர்(alligator) என இரண்டையும் நாம் முதலை என்றே சொல்கிறோம். பொருள் அடிப்படையில் இரண்டும் சரிதான். பல்லி என்னும் பொருளுடைய கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது குரோகடைல். பல்லி என்னும் பொருளுடைய இசுபானியச் சொல்லில் இருந்து உருவானது அலிகேட்டர். மூலப் பொருள் ஒன்றாயினும் வெவ்வேறு வகையைக் குறிப்பதால் நாமும் அவ்வாறே குறிப்பதே சிறப்பு. முதலை, இடங்கர், கராம் என முதலைகளின் வெவ்வேறு வகைகள் பழந்தமிழகத்தினர் அறிந்திருந்தனர். குறிஞ்சிப்பாட்டில் ஒரே வரியிலேயே(257) கொடுந் தாள் முதலையும், இடங்கரும்,…