தமிழ்க் கலைகள் பாதுகாப்புப் போராட்டம்.
இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு அழிக்கப்படும் தமிழ்க் கலைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம்! இலங்கையில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தேசிய இனத்தின் புலம்பெயர் கூறுகள் நாங்கள். சிங்கள பௌத்த இனவெறியர்களாலும் ஏகபோக அரசுகளாலும் சூறையாடப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்கள் கூட வணிகமாக்கப்படும் அவமானகரமான சூழலில் நாங்கள் வாழ்கிறோம். அபகரிக்கப்படும் தமிழ் மண்ணில் உலகின் பல்தேசிய நிறுவனங்கள் தமது பேரரசை நிறுவிக்கொள்கின்றன. ஒருபுறத்தில் சிங்கள-பௌத்தக் குடியேற்றங்களும், மறுபுறத்தில் பல்தேசிய வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்பும் தமிழ் அடையாளத்தை அழித்து வருகின்றன. இவையெல்லாம் இனச்சுத்திகரிப்பைப் படம்போட்டுக் காட்டுகின்ன்றன. கிழக்கில் தமிழர்கள் சிறுபான்மை…