ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 Department – துறை என்கிறோம். அரசு பல்வேறு துறைகளாகச் செயல்படுகின்றது. இவற்றை மேலாண்மைப்படுத்தும் செயலகத்திலும் பல்வேறு துறைகள் உள்ளன. ஆனால், இரண்டிற்கும் வேறுபாடு தேவை. ஏனெனில், செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறையும் தன்னுள் பல துறைகளை அடக்கியது. எடுத்துக்காட்டாகச் செயலகத்தில் உள்ள உள்துறையில் காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை போன்ற பல துறைகள் அடங்கும். ஆங்கிலத்தில் உள்ளதுபோல் தமிழிலும் இரண்டிற்கும் துறை என்ற ஒரே சொல்லையே பயன்படுத்துவது குழப்பத்தைத்தான் தருகின்றது. இரண்டிற்கும்…