கலைச்சொல் தெளிவோம்! 92 – 94. உயர்வு தொடர்பான வெருளிகள்
92 – 94. உயர்வு தொடர்பான வெருளிகள் உயர்பு வெருளி-Acrophobia உயர்நிலை வெருளி-Altophobia உயர வெருளி-Hypsiphobia ஆழம் பற்றிய அச்சம் வருவதுபோல், உயரம் பற்றிய அச்சமும் இயல்புதானே! சங்கப்பாடல்களில் உயர்(210), உயர்க்குவை(1), உயர்க(3), உயர்த்த(8), உயர்த்து(4), உயர்திணை(1), உயர்ந்த(15), உயர்ந்ததேஎம்(1), உயர்ந்தவர்(1), உயர்ந்தவள்(1), உயர்ந்தன்று(4), உயர்ந்திசினோர்(1), உயர்ந்து(17), உயர்ந்துழி(1), உயர்ந்தோர்(8), உயர்ந்தோருலகு(1), உயர்ந்தோர்நாடு(1), உயர்ந்தோருலகம்(1), உயர்ந்தோன்(1), உயரிநிலைஉலகம்(7), உயர்நிலைஉலகு(5), உயர்பு(4), உயர்வு(2), உயர(2), உயரி(2), உயரிய(6), உயரும்(1), உயருலகு(1) என மலையுச்சி போன்ற உயரமான இடங்களைக் குறிக்கும் வகையிலும் உயரத்தின் அடிப்படையில் பண்பில்,…