இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை! இன்றைய நாள் (03.09.2023) தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள். இதனை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பெறுகிறது. பொதுவாக இலக்குவனார் என்றால் பன்முக முதன்மை எண்ணங்கள் வரும். பள்ளியில் படிக்கும் பொழுதே தனித்தமிழில் கவிதைகள் எழுதியவர். புலவர் படிப்பு மாணாக்கராக இருக்கும்போது ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்ப்பாவியம் படைத்தவர். மாணாக்க நிலையில் தனித்தமிழ்ப்பாவியம் படைத்தவர்களில் முதலாமவராக இலக்குவனார் விளங்குகிறார். அது மட்டுமல்ல. இது மொழிபெயர்ப்புத் தழுவல் படைப்பாகும். அந்த வகையில் படிக்கும்…