பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 2/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 3/7   “சி.இலக்குவனாரின் தமிழ்மொழிச் சிந்தனை”கள் யாவை என ஆய்வாளர் மு.ஏமலதா அருமையாக விளக்கியுள்ளார். சமற்கிருதச் சார்புடையதாகத் தொல்காப்பியத்தைப் பிறர் தவறாகச் சொல்லி வந்ததை மாற்றித் தமிழ்மரபில் தமிழ் மரபு காக்க உருவாக்கப்பட்டது தொல்காப்பியம்;  தமிழில் தூய்மை பேணுவதே தமிழையும் தமிழரையும் காக்கும்; வீட்டுச் சமையல் போன்ற கலப்பில்லாத தூயதமிழே தேவை;…

மாந்தனை நன்னிலையில் ஆக்குவது திருக்குறள் – இரா.இளங்குமரன்

மாந்தனை நன்னிலையில் ஆக்குவது திருக்குறள்  மாந்தனை மாந்தன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைச் சான்றோன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைத் தெய்வம் ஆக்குவது திருக்குறள்; மாந்தனை இறைவன் ஆக்குவது திருக்குறள்; மாந்தனைப் பெயராக் கடவுட் பெருநிலையில் ஒன்றச் செய்வதும் திருக்குறள். -புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

அதிமுக நன்றி கூற வேண்டியது திமுகவிற்கே! – இலக்குவனார் திருவள்ளுவன்

அதிமுக நன்றி கூற வேண்டியது திமுகவிற்கே!    அதிமுக வெற்றி பெற்றதற்கு “வைகோவிற்கு நன்றி கூற வேண்டும்”, “விசயகாந்திற்கு நன்றி கூற வேண்டும்”, “இராமதாசிற்கு நன்றி கூற வேண்டும்” என்றெல்லாம் வஞ்சப்புகழ்ச்சியாகத் திமுக அன்பர்கள் கூறி வருகின்றனர். உண்மையில்,  ‘அதிமுகவின் ஆ அணி’ என மக்கள்  நலக்கூட்டணியைக் கூறிவந்த திமுகதான் அதிமுக துணை அணியாகச்  செயல்பட்டு அதனை வெற்றி பெறச் செய்துள்ளது என்பது வெள்ளிடை மலை.   அதிமுக, திமுக நேரடியாக மோதிய தொகுதிகள் 172இல்  அதிமுக 83 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. திமுக…

கலைச்சொல் தெளிவோம்! 65.முடுக்கி-accelerator இலக்குவனார் திருவள்ளுவன்

65.முடுக்கி-accelerator    ஆக்சிலெரேட்டர் (accelerator) என்பதற்கு உயிரியல், வேதியல், மீனியல்,மனையியில், தகவலியல் ஆகியவற்றில் முடுக்கி என்றும் பொறி யியலில் முடுக்கி என்பதுடன் ஊக்கி என்றும் கையாளுகின்றனர். இலங்குதுளை செறிய ஆணி முடுக்கி (மலைபடுகடாம் : 27) என்பதன் அடிப்படையில் முடுக்கி என்ற சொல்லையே சீராகக் கையாளலாம். முடுக்கி-accelerator – இலக்குவனார் திருவள்ளுவன்