ஒன்றிய அரசு செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன் காணுரை
முற்றம் இணையத் தொலைக்காட்சி தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் விசவனூர் வே. தளபதி, ஆசிரியர் – முற்றம் திங்களிதழ் ஒன்றிய அரசு செய்ய வேண்டுவன பகுதி1 ஒன்றிய அரசு செய்ய வேண்டுவன பகுதி2
முதல்வர் தாலின் அவர்களே! ஆங்கிலக் காதலைக் கைவிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 26 தொடர்ச்சி) முதல்வர் தாலின் அவர்களே! ஆங்கிலக் காதலைக் கைவிடுங்கள்! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 27 மாண்புமிகு முதல்வர் அவர்களே! நீங்கள், தமிழ், தமிழர் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொழுது “இது தமிழை, தமிழினத்தைக் காக்கும் ஆட்சி” என்று பேசுகிறீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது. சான்றாக, வடஅமெரிக்கத் தமிழர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றியபொழுது (சூலை 2022) “தமிழ் மொழிக்கு முதன்மைத்துவம் தருவதோடு, தமிழினத்தைக் காக்கும் ஆட்சியாகவும் நடந்து…
இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 26 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 25 – ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! – தொடர்ச்சி) இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.தாலின், “தமிழ்நாடு சொல் அல்ல! தமிழரின் உயிர்!” என அருமையாகக் கூறியுள்ளார். பாராட்டுகள்! ஆனால் அந்த உயிர் குற்றுயிரும் குறையுயிருமாக உள்ள வேதனையை யாரும் உணரவில்லை. தமிழரின் வாழ்க்கை மொழியாகத் தமிழில்லை. கல்வி மொழியாகவோ வழிபாட்டு மொழியாகவோ சடங்கு மொழியாகவோ வேலை வாய்ப்பு மொழியாகவோ ஆராய்ச்சி மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ அன்றாடப் பயன்பாட்டு மொழியாகவோ…
133 மணிநேரத் திருக்குறள் தொடரரங்கம் + 3ஆம் நாள் நிகழ்வு
மூன்றாம் நாள் 15.01.2022அமர்வுகள் – நிகழ்ச்சி நிரல் 9.30 குறள் வாழ்த்து நல்லாசிரியர் இரத்னா.தே. தமயந்தி அவர்கள் வரவேற்புரை திருக்குறள் முனைவர் ஔவை தாமரை தலைமையுரை செம்மொழிக் கலைஞர் விருதாளர்அருள்திரு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு ஐயா அவர்கள் சிறப்புரை 1)தமிழாறு சாலமன் தங்கதுரை அவர்கள்கல்வியாளர்சத்தியம் ஆதாரக் கல்வி அறக்கட்டளைபொன்னேரி 2)பேராசிரியர் வெ.அரங்கராசன் அவர்கள் நன்றியுரை முனைவர் மா.பாப்பா உதவிப் பேராசிரியர், பாத்திமா கல்லூரி மதுரை அமர்வு 17 தலைமை முனைவர் சௌ.கீதாமுதல்வர்அ.ம.க.கல்லூரி, காரிமங்கலம் கட்டுரையாளர்கள் 1) செல்வி நா.சையதலி பாத்திமா 2)முனைவர்…
மொழியியல் பல்கலைக்கழகம் தேவையா? இலக்குவனார் திருவள்ளுவன் காணொளி உரை, தேசத்தின் குரல்
மொழியியல் பல்கலைக்கழகம் தேவையில்லை என்பது குறித்துத் தேசத்தின் குரல் என்னும் நம் ஒளியலை அலைத்தளத்தில் இலக்குவனார் திருவள்ளுவன் ஆற்றிய உரையின் காணொளிப் பதிவு-
இவை தமிழே! ‘ஆதி’ தமிழ்ச்சொல்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
இவை தமிழே! ‘ஆதி’ தமிழ்ச்சொல்..! நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி மீட்பதே மக்கள் இயல்பு. ஆனால் தமிழ் ஆர்வலர்கள் நமக்குரிய தமிழ்ச்சொற்களை அடுத்தவருக்கு உரியவை எனத் தாங்களே கொடுத்து விடுகின்றனர். ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் மிகுதியாக உள்ளன. அவற்றுள் பழக்கத்தில் இல்லாத புதிய சொல்லை மட்டும் தமிழ் என்று ஏற்றுக் கொண்டு பழக்கத்தில் உள்ள நல்ல சொல்லைத் தமிழல்ல என்று தூக்கி எறியும் பழக்கமும் உள்ளது. எனவே, தமிழல்ல எனத் தவறாக எண்ணும் தமிழ்ச்சொற்களி்ல்ஒன்றை இப்பகுதியில் காணலாம். ‘ஆதி’…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 7 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 7 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். (திருவள்ளுவர், திருக்குறள் 306) சினம் என்னும் நெருப்பு, அதனைக் கொண்டவரை மட்டுமல்லாமல் அவருக்குத் துணையாக இருப்பவரையும் அழிக்கும் என்கிறார் திருவள்ளுவர். நெருப்பு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பின் உணவைச் சமைத்தல் போன்ற நிலைகளில் பயன் தரும். ஆனால் கட்டுப்படுத்தப்படாவிட்டால்…