கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே! – கோ.தெய்வநாயகம்

கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே!      தொழில்நுட்பமும் கலைநுட்பமும் இணைந்து உருவாக்கப்படுவதே கட்டடக்கலை. இதன் செம்பொருள் உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே. உலகின் தலைசிறந்த கட்டடக்கலை வல்லுநர்களாகத் தமிழர் விளங்கி உள்ளனர். எனவேதான் பிரித்தானியக் கலைக் களஞ்சியம் தமிழர்களைத் தலைசிறந்த “”கோயிற் கட்டடக் கலைக் கட்டுநர்கள்” எனக் குறிக்கின்றது. வாழ்வியல் மற்றும் சமயஞ்சார் கட்டடக் கலையின் எழிலார்ந்த வடிவாக்கங்களைத் தமிழர்கள் தொன்றுத் தொட்டே ஆளுமையுடன் படைத்துச் சிறந்தமையை இன்றும் தமிழகத்தின் ஊர்களிலும் கோயில்களிலும் கண்டு மகிழலாம். முனைவர்…

பாசக்கயிறா? வேசக்கயிறா? – இலக்குவனார் திருவள்ளுவன்

பாசக்கயிறா? வேசக்கயிறா?     தமிழ்நாட்டில் இறைநம்பிக்கை சார்ந்து காப்புக்கயிறு கட்டும் பழக்கம் உள்ளது. ‘இரட்சா பந்தன்’ என்பதும் பாதுகாப்பு தரும்  உறவை உறுதிப்படுத்துவதற்கான  காப்புக்கயிறுதான். கீற்றுகளை இணைத்து உருவாக்கப்படுவது பந்தல். முத்துகளை இணைத்து உருவாக்கப்படுவது முத்துப்பந்தல். இவைபோல் உறவுகள் இணைந்த அமைப்பே பந்தம். பாசக்கட்டினைக் குறிக்கும் பந்தம் என்பது தமிழ்ச்சொல்லே. பந்தத்திற்குரியவன் பந்தன் என்றாகியுள்ளது.  ‘இரட்சா பந்தன்’ கொண்டாட்டத்திற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பாரதப்போரில் கிருட்டிணனுக்குக் கையில் அடிபட்டுக்  குருதி வடிந்த பொழுது பாஞ்காலி, அவரது கையில் தன்சேலைத்தலைப்பைக் கிழித்துக் கட்டியதாகவும் இதனால்…

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 83-100: இலக்குவனார் திருவள்ளுவன்

  (வைகாசி 25, 2045 / சூன் 08, 2014 இதழின் தொடர்ச்சி)   83. தமிழியல் வழக்கினன் றணப்புமிகப் பெருக்கி – பெருங்கதை: 4. வத்தவ காண்டம்: 17. விரிசிகை வதுவை : 67   84. எடுக்கும் மாக் கதை இன் தமிழ்ச் செய்யுள் ஆய் நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திட(த்) – பெரியபுராணம்: பாயிரம் 3     85. பாட்டு இயல் தமிழ் உரை பயின்ற எல்லையுள், கோட்டு உயர் பனிவரைக் குன்றின் உச்சியில் – பெரியபுராணம்: 1….