சாதி எதிர்ப்பை நலிவாக்கவும் சாதி அமைப்பை வலுவாக்கவும் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் சாதிமுறை அமைப்பு இல்லை. எனவே தொல்காப்பியத்தில் சாதி குறித்த எவ்வகைக் குறிப்பும் காணப்படவில்லை. வடஇந்திய நாகரிகத்தையும்   பண்பாட்டையும் பின்பற்றிய காரணத்தினால் தமிழ்நாட்டில் படிப்படியாகச் சாதி அமைப்பு ஏற்பட்டது. முனிவர்களும் அறிஞர்களும் சாதி முறையை எதிர்த்தனர். தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்ட புலவரும், மெய்யியல் அறிஞருமான திருவள்ளுவர், சாதி அமைப்பை “பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” “அந்தணர் என்போர் அறவோர் மற்றுஎவ்உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்” எனக் கண்டிக்கிறார்….