செஞ்சீனா சென்றுவந்தேன் 8 – பொறி.க.அருணபாரதி
(ஆடி 18, 2045 /ஆகத்து 03, 2014 இதழின் தொடர்ச்சி) 8. சீனத் தொழிலாளர் வருக்க நிலை நான் வந்துள்ள சியான்நகரில் மட்டும் 800க்கும் மேற்பட்டதகவல்தொழில்நுட்பநிறுவனங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தேன். இந்நிறுவனங்களில் மொத்தமாகக் கணக்கெடுத்தால், நேரடியாக 1 இலட்சம்பேர்தான் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர் எனச் சொல்கிறது, சீன அரசு. அதாவது, 1 நிறுவனத்தில் 1200 பேர் எனச் சராசரியாகக் கணக்கிட்டால் வரும் எண்ணிக்கைஇது! பல்லாயிரம் கோடிகளை அறுவடை செய்யும் மென்பொருள் நிறுவனங்கள், அதைச் சிலஆயிரம் பேரைக் கொண்டேசாதிக்கிறது. அந்தளவிற்குச், சீனாவில் மலிவான விளைவில் உழைப்பை…