திலீபன் – உயிர்க்கொடைஞர்களின் குறியீடு.
திலீபனைப் போற்றி விடுதலையை மீட்டெடுப்போம்! காந்தி வழியில் நடந்ததால், காந்தியம் பேசும் இந்தியத்தால் பறிக்கப்பட்டது திலீபனின் உயிர். இந்தியம் என்பது என்றென்றைக்கும் தமிழ்ப்பகையை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளத் தயங்காது என்பதை உறுதிப்படுத்திக் காட்ட விரும்பியதால் திலீபனின் அறப்போர், உயிர்ப் பறிப்பில் முடிந்தது. இராசையா பார்த்தீபன் என்னும் திலீபன், கார்த்திகை 12, 1994 / 27.11.1963 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஊரெழு என்னும் ஊரில் பிறந்து ஊரெழும் வண்ணம் உலகு தொழும் வண்ணம் வீரனாய் மலர்ந்து வீரனாய்ப் புகழுடல் பெற்றார்.ஆவணி 30, 2018 /…