கலைஞர் கருணாநிதியின் சிறப்புகளைக் கூறுவது தவறா? கொடுந்தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தவறா? – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைஞர் கருணாநிதியின் சிறப்புகளைக் கூறுவது தவறா? கொடுந்தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தவறா? உலகில் நிறையில்லாத மனிதனும் இல்லை. குறையில்லாத மனிதனும் இல்லை. நிறையையும் குறையையும் கணக்கிட்டு மிகுதியானவற்றின் அடிப்படையில்தான் ஒருவரை மதிப்பிட இயலும். மிகுதி என்பது எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல் தன்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஒருவரின் நிறையையோ குறையையோமட்டும் சுட்டிக்காட்டுவதுதான் தவறே தவிர, இரண்டையும் சுட்டிக்காட்டுவது தவறல்ல. கலைஞர் கருணாநிதி மரணப் படுக்கையில் இருக்கிறார். எனினும் எமனின் அழைப்பை வென்று வாழ்கிறார். அவர் நலன் எய்தி நூறாண்டுக்கு மேலும் வாழ வாழ்த்துவோம்! …