கருவிகள் 1600 : 281-320 : இலக்குவனார் திருவள்ளுவன்
கருவிகள் 1600 : 281-320 : இலக்குவனார் திருவள்ளுவன் 281. உள்ளகவரைவி – tomograph: குறிப்பிட்ட திசு அடுக்கு சிறப்புக் கதிர் வீச்சு வரைவி எனச் சொல்லப்படுவது கலைச்சொல்லாக அமையாது. திசு என்பதைத் தமிழில் மெய்ம்மி எனச் சொல்ல வேண்டும். கூறு கூறாக ஆராய உதவுவது என்றாலும் ‘டோமோ’ என்பதற்குத் தளம் என்னும் நேர்பொருளில் சிலர் கையாள்கின்றனர். அவ்வாறு இதன் அடிப்படையில் தளவரைவி என்னும்பொழுது தரைத்தளம் என்பதுபோல் வேறுபொருள் வந்துவிடுகின்றது. உடலின் உட்பகுதியைக் கதிர்வீச்சுமூலம் பதியும் வரைவி. எனவே, உள்ளகவரைவி எனலாம். 282. உளநிலை…