கவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்!
கவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்! இ.ஆ.ப. அலுவலராகச் சிறப்பாகப் பணியாற்றிய இயற்பெயர் பி.பாண்டியன் எனக் கொண்ட கவிஞர் முனைவர் பேகன் இன்று ( ஆனி 11, 2050 / 26.06.2019) காலை செய்தி கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது வியர்த்துக் கொட்டுவதாகக் கூறிப் பின்னர் உயிரிழந்தார். இவரது மக்கள் வெளிநாட்டில் உள்ளதால் அவர்கள் வருகைக்காக இரு நாள் பின்னரே இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரின் உறவினர், மேனாள் மொழிபெயர்ப்புத் துணை இயக்குநர், முனைவர் கு.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். சிறந்த கவிஞராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் திகழ்ந்து பல நூல்களைத் தமிழிலும்…