மறக்க முடியுமா? : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் – எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? : பேராசிரியர் பூ.ஆலாலசுந்தரனார் தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற என் நண்பர் ஒருவர் நல்ல படிப்பாளி, நிறைய படித்திருக்கிறார். அவரிடம் நான் கேட்டேன், “பூ.ஆலாலசுந்தரனார் குறித்து உங்களிடம் செய்தி ஏதாவது இருக்கிறதா?” அவர் சொன்னார், “இந்தப் பெயரையே நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன்” சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு நண்பரிடமும் இதே கேள்வியைக் கேட்டேன். “இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது!” இப்படிச் சொன்னார்…