ஒன்றாய் இருத்தலைப் பார்க்கிறோம் – அழ.வள்ளியப்பா

ஒன்று சேர்தல்            கூட்டம் கூட்ட மாகவே குருவி பறந்து சென்றிடும். குவியல் குவிய லாகவே கொட்டிக் கற்கள் கிடந்திடும். கூறு கூறாய்ச் சந்தையில் கொய்யாப் பழங்கள் விற்றிடும். குலைகு லையாய்த் திராட்சைகள் கொடியில் அழகாய்த் தொங்கிடும். வரிசை வரிசை யாகவே வாழைத் தோப்பில் நின்றிடும். மந்தை மந்தை யாகவே மாடு கூடி மேய்ந்திடும். சாரை சாரை யாகவே தரையில் எறும்பு ஊர்ந்திடும். நேரில் தினமும் பார்க்கிறோம் நீயும் நானும் தம்பியே! – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா

நன்றி மறவேன் என்றும்! – இலக்குவனார் மறைமலை

  சொந்தக் கதை 01 எண்ணிப் பார்த்தால் எனக்கே நகைப்பாம் அறுபது  அகலுது  வருவது எழுபது எண்களில்  மட்டுமே இந்த மற்றம் எனக்குள் எந்த மாற்றமும் இலையே! பிறந்தேன் எனல்பிழை பெற்றனர் என்னை; இலக்குவர் மலர்க்கொடி இணையர் அன்பால் உலகினில் தோன்றினேன் என்செயல் என்ன? வந்தேன் வளர்ந்தேன் வண்டமிழ்ச் சூழலில்! கல்வியால் பதவியும் பதவியால் செல்வமும் மேலும் மேலும் மேன்மையும் தேடிய அறிஞர் நிறைந்த அருந்தமிழ் நாட்டில் கல்வியும் பதவியும் செல்வமும் கொண்டே தமிழின் உரிமை மீட்கும் பணியில் தளரா(து) உழைத்தவர் என்னருந் தந்தை…

இந்தியக் குடியரசுக் கட்சி (S.D.P.I.) பொறுப்பாளர்கள் கூட்டம்

  தேனி மாவட்டத்தில் இந்தியக் குடியரசுக் கட்சி (S.D.P.I.) பொறுப்பாளர்கள் கூட்டம்   தேவதானப்பட்டியில் இ.கு.க.(எசு.டி.பி.ஐ.கட்சியின்) நகர நிருவாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்திற்கு நகரத்தலைவர் பாரூக் இராசா தலைமை ஏற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்டப் பொருளாளர் சையது ஆசிக் அவர்களும் கம்பம் தொகுததி தலைவர் நிசாம் அவர்களும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சாகிர் உசேன் அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். பொட்டிப்புரம் ஊரில் அமையவுள்ள நீயூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிடவேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில்…

இலக்கு – கூட்டம் : ஆடி 27, 2045 – 12.08.2014

வணக்கம்.. இந்த மாத இலக்கு – கூட்டம். ஆடி 27, 2045 – 12.08.2014- மாலை 6.30 மணிக்கு,  பாரதியவித்யா பவன் சிற்றரங்கில்  நிகழ இருக்கிறது..  தங்களோடு, இளைய தலைமுறையையும் அழைத்து வந்து, நிகழ்ச்சியைச் சிறபிக்க  வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்.. (நெறியாளர் இலக்கு..)  ப. சிபி நாராயண்.. (தலைவர் இலக்கு.) ப. யாழினி.. (செயலர் இலக்கு..)​​

வளைகுடா வானம்பாடி : திங்கள் சிறப்புக்கூட்டம்

குவைத் வளைகுடா வானம்பாடியின் திங்கள் சிறப்புக்கூட்டம் மங்கப் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது. நிறுவனர் திரு.கா.சேது அவர்கள் தொடங்கி வைக்க திரு சுப்புராசு அவர்கள் தலைமை வகித்தார்கள். தாயகத்தில் இருந்து தமிழரின் சிறப்புகளை ஆராய்ந்து வரும் ஆராய்ச்சியாளர் தொலைபேசி வழியே பல அரிய தகவல்களைப் பகிர்ந்து சிறப்புரையாற்றினார். வழக்கம்போல் குவைத் கலைஞர்களின் பாடல்கள், கவிதைகள் என்று மேடையில் களைகட்டியது. மருத்துவர் திருமதி சுதந்திராதேவியின் மருத்துவ  அறிவுரைப்பகுதி எல்லோருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. ‘தமிழ் சமூகத்தில் காதல்’ என்று நிலவனும், ‘தமிழர்களின் ஒற்றுமை’ என்று திரு…